×

திமுக போராட்டத்தில் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் நேற்று வெளியிட்ட அறிக்கை: திமுக சார்பில் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கோரி திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் வரும் 20ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், தமிழ்நாடு இளைஞர்கள் சங்கமும் பங்கேற்கிறது. எனவே மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். திமுக சார்பில் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கோரி 27.7.2017 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

The post திமுக போராட்டத்தில் தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Youth Association ,DMK ,Chennai ,State President ,MMR ,Madhan ,Tamil Nadu ,NEET ,Dinakaran ,
× RELATED பருவ மழை காலத்தில் வெள்ள நீர் விரைந்து...